(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அரச அலுவலக நிருவாக முகாமைத்துவ நூல் அறிமுக நிகழ்வு.

இலங்கை அரச அலுவலக நிருவாக நடைமுறைகள் எனும் நூல் அறிமுக நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (4) இடம்பெற்று இருந்தன.

இதன்போது இலங்கை நிருவாக சேவையின் விசேட நிலை சிரேஷ்ட செயலாளரான சிதம்பரம்பிள்ளை அமலநாதனால் எழுதப்பட்டு இவ் நூலானது அரச போட்டிப் பரீட்சைச்சார்த்திகள் நன்மை பெறும் வகையில் சுமார் 3 ஆயிரம் பிரதிகள் வெளியீடு வைக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் அறிமுக நிகழ்வும் நூலாசியரும் மேலதிக செயலாளுமான சிதம்பரப்பிள்ளை அலமநாதனை பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.


இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.நடேசன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours