(வி.ரி.சகாதேவராஜா)
இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் ஒருதொகுதி உலருணவுப்பொருட்களை பொருட்களை வழங்கிவைத்துரையாற்றுகையில் தெரிவித்தார்.
அந்தவகையில் வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லம், கல்முனை மெதடிஸ்த சிறுமியர் இல்லம், அக்கரைப்பற்று விபுலாநந்த சிறுவர் இல்லம் ஆகிய 3 இல்லங்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப்பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு சிவில்சமுக சம்மேளன மாவட்ட இணைப்பாளர் வ.பரமசிங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(16) திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உதவிபிரதேசசெயலாளர் எஸ்.பார்த்தீபன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இணைப்பாளர் எ.எல்.அஸார்தீன் இல்லபொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யுஎஸ்எயிட் ஸ்தாபனத்தின் நேரடிபங்குதாரர்களான மனித எழுச்சி நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம் சார்பில் இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.
அங்கு மேலதிக அரசஅதிபர் மேலும் பேசுகையில்:
பேரிடர்கள் அனர்த்தங்களை எதிர்கொள்வதென்பது கஸ்டம்தான். எனினும் அத்தகைய இக்கட்டான காலங்களில் அவை மக்களுக்கு நல்ல படிப்பினைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை.அவை ஏனையோருக்கு உதவும் நல்ல மனிதபண்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சுனாமி மற்றும் சமகால கொரோனா அனர்த்தங்கள் எமக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளன.நல்லபழக்கவழங் கங்களுடன் கூடிய மற்றவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய வாழ்க்கைக்கோலங்களை மாற்றித்தந்துள்ளன. இப்படிப்பட்ட காலங்களில் கஸ்டங்களைபகிர்ந்துகொண்டு இஇனமதபேதமற்று நாம்உதவிசெய்யவேண்டும்.
கடந்தமாதம் ஏழு இல்லங்களுக்கு சுகாதாரபொருட்களை வழங்கியிருக்கிறோம்.
வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . கொரோனா 3வது அலை இன்று தாண்டவமாடுகின்றது. தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்றிக்கொள்ளவேண்டும்.
சிறுமியர் இல்லத்தை நடாத்துவதென்பது எளிதான காரியமல்ல. பல விமர்சனங்களைத்தாண்டி நடாத்தவேண்டிய நிலை. விரைவிலே கொரொனா என்கின்ற ஆட்கொல்லி நோயிலிருந்து விடுபடவேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் அவதானமாக சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றார்.
காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் பேசுகையில்: இன்று இல்லங்களுக்கான உதவிகள் என்பன குறைந்துவிட்டது. வெளிநாடு அல்லது அரசசார்பற்றநிறுவனங்களின் உதவிகளும் குறைந்துவிட்டன. அத்தகைய காலகட்டத்தில் வழங்கப்படும் உலருணவு என்பது வரப்பிரசாதமாகும். காலத்தினாற்செய்த உதவி பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்றார்.




Post A Comment:
0 comments so far,add yours