(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு.மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் இன்று(28)சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்
சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது Zoom கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரை மாய்த்துள்ள நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours