பைஷல் இஸ்மாயில் - 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (16) அம்பாறை மாவட்ட பல பிரதேசங்களில் அவரை ஞாபகப்படுத்தி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மர நடுகையும், மர்ஹூம் அஸ்ரபின் ஈடேற்றத்துக்கான விசேட துஆப் பிராத்தனைகள், கத்தமுல் குர்ஆன் தமாம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

பாலமுனை பிரதேசத்தில் மர்ஹும் அஸ்ரப் நினைவுதின நிகழ்வுகளை கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எஸ்.எம்.எம்.ஹனிபா மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.அலியார் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. 

மர்ஹும் அஸ்ரபின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்டளவில் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours