அதிபர்கள், ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்காலக் கொடுப்பனவு இந்த மாதச் சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை முழுமையாகத் தீர்ப்பதில் சிக்கல் உள்ளது.

இதனால் அடுத்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அவர்களது சம்பள முரண்பாட்டைக் கட்டம் கட்டமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours