(க.விஜயரெத்தினம்)

பொருண்மை தமிழ் பேசும் சமூகங்களிடையே கலை இலக்கிய பன்னாட்டுப் பெறுமானங்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கு.

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் சர்வதே தமிழ் ஆய்விழழுடன் இணைந்து “பொருண்மை தமிழ் பேசும் சமூகங்களிடையே கலை இலக்கிய பன்னாட்டுப் பெறுமானங்கள்” எனும் கருப் பொருனிக்கீழ் அண்மையில் நிகழ்நிலை ஊடக பன்னாட்டுக் கருத்தரங்கொன்றை நடாத்தியிருந்தது.


மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டஎழுத்தாளர் சங்க நிறைவேற்றுத் தலைவருமான  க.கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வரவேற்புரையை மாவட்டச் செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரனும்,  நோக்கவுரையை மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் முருகு தயாநிதியும், வாழ்த்துரையை மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு) பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரனும், ஆதார சுருதி உரையை மேனாள் பீடாதிபதி (ஓய்வு) கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் சி.மௌனகுருவும் நிகழ்த்தினர்.மேலும் சிறப்புரைகளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவும், கோயம்புத்தூர், தமிழ்நாடு கற்பகம் உயர் கல்விக்கழக மொழிவுகள் துறை  தமிழ்ப்பிரிவு உதவிப் பேராசிரியர் முனைவர் ர.சுரேஷ்யும் நிகழ்த்தினர்.அமர்வு தலைமையுரையை  கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைமேனாள் துறைத் தலைவர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்,   கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் முனைவர் வானதி பகீரதன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, தமிழ் மொழியியல் புலம் பேராசிரியர் நா.சுலோசனா,  திறந்த பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் முனைவர் கலா சந்திரமோகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நன்றியுரையை மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின்  செயலாளர் மைக்கல் கொலின் அவர்களும்,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை  மாவட்டச் செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் அவர்களும், நிகழ்ச்சி நெறியாழ்கையை மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் த.இன்பராசா அவர்களும், நிகழ்த்தினர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours