எஸ்.சதீஸ் -
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கியில் சேதனப் பசளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை பி.ப (17) இடம்பெற்றது.
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் போன்றோரின் ஆலோசனைக்கமைவாக வங்கி முகாமையாளர் அசோக்குமார் பிரியதர்சினியின் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற இச் செயற் திட்டத்தில், கரவெட்டி பிரிவின் விவசாய போதனாசிரியர் கே. லிங்கேஸ்வரன் கலந்துகொண்டு சேதனப்பசளை தயாரிப்பு தொடர்பாக செய்முறை ஆலோசனையினையும் விளக்கத்தினையும் வழங்கினார்.
அரசாங்கத்தின் நஞ்சற்ற விவசாய செய்கை தேசிய திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி திணைக்களத்தினால் இச் செயற்திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சமுர்த்தி அதிகாரிகள் தெரிவித்தனர்
இதே போன்று கிராம மட்டங்களிலும் எதிர்காலத்தில் சேதனப்பசளை தயாரிக்கும் செயற்பாடு இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் நக்கீரன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Post A Comment:
0 comments so far,add yours