(வி.ரி.சகாதேவராஜா)
ஊரடங்குவேளையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த யானைகள் பலத்த அட்டகாசம் செய்து பலத்த சேதங்களை ஏற்படுத்திச்சென்றன.
முற்பகல் 2.10மணியளவில் ஊருக்குள் புகுந்த யானைகள் வீதியால் சென்றபோதும் அருகிலுள்ள கதவுகள் மதில்கள் அனைத்தையும் பதம்பார்த்துச்சென்றன.சிலரது வளவுக்குள்ளும் சென்றன.
மிகவும் உயரமான பாரிய யானையொன்றும் அதில் காணப்பட்டதால் மக்கள் மிகுந்த பீதியுடன் சுமார் இருமணிநேரம் இரவைக்கழிக்கவேண்டியதாயிற்று.
இளைஞர்கள் சிலர் சேர்ந்து யானையை விரட்டியபோதும் மறுபக்கதால் மற்றுமொரு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. காரைதீவில் சனஅடர்த்திமிக்க முதலாம் இரண்டாம் பிரிவுகளில் யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றன.
பலரது மதில்கள் பிரதான வாசல் கேட்டுகள் பயிர்பச்சைகள் அனைத்தும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகின.எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் பகல்போல்இருந்ததால் பலரது வீடுகளிலிருந்த சிசிரிவி கமராக்களுள் யானைகளின் அட்டகாசமும் இளைஞர்கள் துரத்திச்செல்வதும் பதிவாகியிருந்தது. சிலஇளைஞர்கள் தமது கையடக்கததொலைபேசியில் படங்களை சிறைப்பிடிக்கவும் தவறவில்லை.




Post A Comment:
0 comments so far,add yours