-க.விஜயரெத்தினம்)


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 2021 செப்டம்பர் 23 தொடக்கம் 30ம் திகதி வரை நாடுபூராகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.அதனை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் இன்று (25)இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் எஸ்.விக்னராஜா, தலைமையக முகாமையாளர் திருமதி. புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துப் பணிப்பாளர் திரு.கே.உதயகுமார்,கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமிழ்வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வாரத்தினுள் பல்வேறு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் நிறைவடைந்த திட்டங்களும் பயனாளிகளிடம் கையளிக்கப்பவுள்ளன.சகலரும் சுகாதார முறையை கடைப்பிடித்து நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours