கொவிட் தடுப்புக்கான இரண்டாவது தடுப்பூசியை இதுவரை பெறாத மற்றும் ஏனையோர்களுக்குமான தடுப்பூசியேற்றும் பணிகள் செவ்வாய் (07-09-2021) மற்றும் புதன் (08) ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.
இவ்விரு தினங்களிலும் முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை 04 நிலையங்களில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/ அல்-ஜலால் வித்தியாலயம் ஆகியவற்றில் தமது கிராம சேவகர் பிரிவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலையமொன்றில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், முதலாவது தடுப்பூசியைப் பெற்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி அட்டையைக் கொண்டு வருமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours