(க.விஜயரெத்தினம்)


தடுப்பூசி பெறாதவர்களுக்காக இராணுவத்தினர்,சுகாதார பிரிவினர் இணைந்து தினமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலையை  முன்னெடுத்து வருகின்றார்கள்.எனவே காலத்தை விரயமாக்காது அனைவரும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு மக்களை  கேட்டுகொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா முதலாம் கட்ட தடுப்பூசி 2 இலட்சத்து 82 ஆயிரம் பேருக்கும்,இரண்டாவது கட்ட தடுப்பூசி 2இலட்சத்து 49 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 3066 பேரும்,30 தொடக்கம் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான 35 221 பேர் தடுப்பூசிகளை பெறாமல் உள்ளனர்.இவர்கள் பற்றிய தகவல்களை பெற்று இராணுவத்தினர் வீடு,வீடாக சென்று தடுப்பூசிகளை வழங்கிவருகின்றனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற தயக்கம் காட்டுவதால் எம்மால் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முடிக்க முடியாமல் உள்ளது.மாவட்டத்தில் இதுவரை கொரோனா 3வது அலை காரணமாக 286 பேர் மரணமடைந்துள்ளதோடு நேற்றைய தினம் 146 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 8 பேர் மரணித்துள்ளனர்.
தடுப்பூசி பெறாதவர்கள் வைத்தியசாலைகளில் முன்னாயுத்தத்துடன் சென்று தடுப்பீசிகளை பெற வேண்டும். மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றாலே கொரோனாவை நாம் விரட்டியடிக்கமுடியும் எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours