உயர்கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே மொடேர்னா அல்லது பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வா மேலும் கூறுகையில், உள்ளூரில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகளைக் கோரும் எவரும் தங்கள் வெளிநாட்டு கல்வி தொடர்பான ஆவண சான்றுகளை வழங்குவது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.

Post A Comment:
0 comments so far,add yours