(திருக்கோவில்  -எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேசத்தில் சிவனருள் பவுண்டேசன் அமைப்பினரால் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் வறுமை நிலையில் வீடற்று வாழும் இரு குடும்பங்களுக்கு புதிய வீட்டுக்கான அடிகல் நடும் நிகழ்வு இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வு அம்பாரை மாவட்ட சிவனருள் பவுண்டேசன் அமைப்பின் அம்பாரை மாவட்ட தலைவர் வாமதேவன் தலைமையில் இன்று திங்கட்கிழமை(27) காயத்திரி கிராமத்தில் இடம்பெற்று இருந்தன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் சிவனருள் பவுண்டேசன் அமைப்பினரிடம்  முன் வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக இவ் புதிய வீட்டுக்கான நிர்மாணப்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ் இரு வீட்டுக்கான நிதியினை புலம்பேர்ந்து இலண்டனில் வாழும் தழிழ் உறவான ரீ.பாலேந்திராவின் வழங்கி இருப்பதுடன் தலா ஒரு வீட்டுக்கு 5இலட்சம் படி இரு வீட்டுக்கும் 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வீட்டின் கட்டுமானப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திருமதி பரிமளாதேவி சில்வெஸ்டர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகததர் மற்றும் சிவனருள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours