"எமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்." என அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம் நேற்று 59 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமது தொழிற்சங்கப் போராட்டத்தால் மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்துக்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours