கொவிட்டுக்கு மத்தியிலும் நாட்டில் அபிவிருத்திப்பணிகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.
மாத்தளை மாநகர எல்லைக்குட்பட்ட களுதாவளை ஆற்றங்கரை வீதி பாதை காப்பட் செப்பனிடும் பணி நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வு சுகாதாரமுறைப்படி சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார். மாநகரசபையின் ஒன்றரைகோடி ருபா செலவிலான களுதாவளை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு கார்ப்பட் வீதியாகக்கருதப்படும் இப்பணி சமயஆசாரங்களுடன் விசேடபூஜையுடன் ஆரம்பமாகியது.
கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் இத்தகைய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து சமுகஆர்வலர்கள் மேயர் பிரகாஷிற்கு பாராட்டுத்தெரிவித்துவருகின் றனர்.
கொடிய கொரோனா தாக்கம் மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கு மத்தியில் மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் நகரிலுள்ள பாதைகளை செப்பனிடும்பணியை நேரடியாகச்சென்று பார்வையிட்டு சீராக பாதயைமைக்க வழிசமைக்கும் அதேவேளை தொழினுட்பக்குழுவினருடன் கலந்துரையாடியும் வருகின்றார்.
கொவிட்டுக்கான விசேட சேவைகள்
இலங்கையில் மாநகரசபையொன்று கொரோனாத்தடுப்புச் சேவைகளை சிறப்பாக முன்னெடுத்துவருகின்றதென்றால் அது மாத்தளை மாநகரசபையாகத்தானிருக்கும் . அப்படி இன்னோரன்ன மக்கள் சேவைகளை அச்சபை முன்னெடுத்துவருவதாக அறியக்கிடைத்தது.
அதுதொடர்பாக மாநகரமுதல்வர் சந்தனம் பிரகாஷ் விபரிக்கையில்:
எமது சபையால் கொரோனாவுக்கென பல வேலைத்திட்டங்களை செய்துவருகிறோம். கூடுதலான நிதியை கொரோனாச்சேவைக்கு ஒதுக்கி பயன்படுத்திவருகிறோம்.உறுப்பி னர்களும் ஏகோபித்தமுறையில் தமது பூரண ஆதரவை நல்கிவருவதும் இவ்வெற்றிக்கு காரணமாகும்.
மக்களைப்பாதுகாக்கின்ற சேவையை நாம் எமது சுகாதாரப்பிரிவினரைக்கொண்டு முதன்மைச்செயற்பாடாக இரவுபகலாகச் செய்துவருகின்றோம்.
முதலாவதாக அம்புலன்ஸ் சேவை பற்றிக்கூறுகிறேன்.
மாத்தளை மாநகர எல்லைக்குள் கொவிட் 19 தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை அவசர நிலைமைகளின் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கு வாகன வசதியின்மையால் அசௌகரியத்துக்கு உள்ளாகிவந்தனர்.
இதற்கு தீர்வுகாணுமுகமாக எமது சபையினால் இவ்விலவச வாகனசேவையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கென ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக உதவி கரம் நீட்டுவதற்காக 24 மணித்தியால இலவச வாகன சேவை கடந்த 24ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு 0710227227 க்கு தொடர்பு கொள்ளலாம்.
இச்சேவையையிட்டு மக்கள் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர்.
தற்காலத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகினால் உறவுகள் ஏனையோர் ஒதுக்கிவருவதைக்காணக்கூடியதாயி ருந்தது. அவரவர் பாதுகாப்பே அதற்கு காரணம். தொற்றின் வேகம் நோயின் அகோரம் என்பனவே அதற்கு காணரங்கள்.
நோய்வாய்ப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்குகொண்டுபோக வாகன உரிமையாளர்கள் தவிர்த்துவந்தார்கள். ஆதலால்தான் தனியான சேவையை செய்ய முன்வந்தோம். கைகொடுத்து உதவவேண்டும்.
இது சுகாதாரத்துறையின் கடமையல்லவா? எவ்வாறு அது சாத்தியமானது? என நீங்கள் கேட்கலாம். உண்மை. எமது சபையிலும் சுகாதாரப்பரிவு உள்ளது. அவர்களின் துணையோடுதான் இம்மக்கள்சேவையை செய்துவருகின்றோம்.பொசிட்டிவ் கருத்ப்பட்டவர்களை எமது அம்புலன்சிஸ் பிஎச்ஜ சகிதம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்வது மட்டுமல்ல அவரோடிருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான மருந்துகளை எமது சபையிலுள்ள மற்றொரு குழுவினர் வழங்குவார்கள்.
கொவிட் நபர் சார்ந்த குடும்பங்களுக்கான சேவைகள் இன்னும் பல மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உலருணவுப்பொதிகளுக்கு மேலதிகமாக சபைமூலமும் வழங்கிவருகின்றோம். எமது சபைமூலமாக தொகுதி தொகுதியாக பிரித்து அவர்கள்மூலம் இப்பொருட்களை வழங்கிவருகிறோம்.
14நாட்காலத்தில் எம்மைவிட்டால் வேறு யாருமில்லை என்ற மனப்பாங்கில் நாம் அர்ப்பணிப்பான மக்கள்சேவையை முன்னெடுத்துவருகின்றோம். சிலவேளை யாரும் இருக்கலாம் ஆனால் அவர்கள் இன்றைய தொற்றுக்காலத்தில் உதவிசெய்ய முன்வரமாட்டார்கள். எனவேதான மக்கள்சேவைக்கென வந்த நாங்கள் அப்பணியை இந்த இக்கட்டான காலகட்டத்தில் வழங்கிவருகின்றோம்.
மேலும் ஏனைய இடங்களில் சுகாதாரத்திணைக்களம் முன்னெடுத்திருக்கின்ற வக்சீன் அதாவது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தையும் பலரும் மெச்சத்தக்கவகையில் சிறப்பாக முன்னெடுத்துவருகிறோம். அதற்கு எமது வைத்தியஅதிகாரி டாக்டர் அனுசா வெலகெதர உள்ளிட்ட சுகாதாரக்குழுவினர் பரிபூரணமாக ஒத்துழைத்து வருகின்றனர்.மாநகரசபையில் 45ஆயிரமளவில் வாக்காளர்கள். மக்கள்சனத்தொகை 90ஆயிரம்பேரளவில் வாழ்ந்துவருகின்றனர்.
கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை பொறுப்பெடுத்து தகனக்கிரியைகளை இலவசமாகச்செய்துவருகிறோம்.
சபையில் ஒரு பிரேரணையைக்கொண்டுவந்து கொரோனாவால் இறக்கின்றவர்களின் உடலங்களை நாமே பொறுப்பெடுத்து இலவசமாக தகனக்கிரியை செய்துவருகின்றோம். இதுவரை சுமார் 150பேர் அளவில் உடல்ங்கள் தகனக்கிரியையை செய்துள்ளோம். ஒருவர் கொரோனாவால் மரணித்தால் அவருக்கு சுமார் 10ஆயிரம் ருபா முதல் 15ஆயிரம் ருபாவரை எமது சபைக்கு செலவாகின்றது.இருந்தும் மக்களுக்கான உயரிய அந்திமகால சேவையாக இதனைக்கருதுகிறோம்.
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் வசதி இல்லாமலுள்ளது. அதையுணர்ந்தே இதிலும் எமது நிவாரணத்தை வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான நோக்கொடு நாம் இவ் இலவச தகனக்கிரியை ஏற்பாட்டை செய்துவருகின்றோம்.உண்மையில் இது எமது மாநகரசபை எல்லைக்குட்பட்டவர்களுக்கு மாத்திரமே என்று ஆரம்பிக்கப்பட்டது. எனினும் எமது எல்லைக்குள் உள்ள மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் கொரோனாவால் மரணிக்கும் அனைவரது உடலங்களையும் அவர் எந்த ஊராக எந்த பிரதேசத்தவராக இருந்தாலும் எந்த இனத்தவராக நாமே முன்னின்று பொறுப்பேற்று அதனை முறைப்படி தகனம்செய்துவருகின்றோம்.
எமது சபையின் அதிகாரவரம்பிற்குட்பட்டவகையில் எமது மாநகரஎல்லைக்குட்பட்ட மக்களுக்கு சேவைசெய்வதே எமது பிரதான இலக்கு. இருந்தபோதிலும் கொரோனாவால் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் இறக்கும் மக்களது உடலங்களை சட்டத்திற்குஅப்பால் ஆனால் அதற்குரிய ஆளுநரின் உத்தியோகபூர்வமாக விசேட அனுமதியுடன் செயற்படுத்திவருகின்றோம்.




Post A Comment:
0 comments so far,add yours