(க.விஜயரெத்தினம்)


15 பவுண் தங்க ஆபரணங்களை தன்னுடன்  நட்புரீதியாக நெருங்கி பழகிய ஒரு சந்தேக நபரிடம் பறிகொடுத்த யுவதி ஒருவர் தங்க ஆபகரணங்கள் கிடைக்காததால்,ஏமாற்றம் அடைந்தும்,மனவிரக்தி அடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சோகச்சம்பவம் துறைநீலாவணையில் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் சனிக்கிழமை(9)காலை 9.30 மணியளவில் குறித்த யுவதி தனது வீட்டில் உள்ள அறையில் சேலையைப் பயன்படுத்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

துறைநீலாவணை 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் சறோஜினி(22-வயது)என்பவரே ஆவார்.இவ்வாறு தற்கொலை சம்பவ இடத்திற்கு விரைந்த பொறுப்பான கிராமசேவையாளர் சம்பவத்தை பார்வையிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாருக்கும் மற்றும் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவலை  தெரியப்படுத்தியுள்ளார்.குறித்த இடத்திற்கு விரைந்த குற்ற விசாரணை பொலிசார்,மற்றும் மரண விசாரணை அதிகாரி போன்றவர்கள் பார்வையிட்டனர்.சடலத்தை மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டு சென்று உடற்கூற்று விசாரணைக்கு உட்படுத்துமாறு பொலிசாரை மரண விசாரணை அதிகாரி  உத்தரவிட்டார்.

தனது தாயை இழந்துள்ள நிலையில் தமது அப்பாவின் அரவணைப்பிலும்,பாதுகாப்பிலும் தமது சகோதரர்களுடன் வாழ்ந்து வருகின்றார்.இவ்வாறான நிலையில் தனது அம்மாவின் தங்க ஆபரணங்கள்,மற்றும் தனது தந்தையினால் வாங்கி கொடுத்த 5 மாலைகள் ,5காப்புகள் உட்பட 15 பவுணுடைய சுமார் 17 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை ஒரு வருடத்திற்கு முன்னர் தன்னுடன் நெருக்கமாக பழகிய சந்தேகநபரிடம் பறிகொடுத்துள்ளார்.இந்நிலையில் குறித்த யுவதி தமது தங்க ஆபரணங்களை உரியவரிடம் கோரியபோதும் கிடைக்காததால் "தனது சாவுக்கு யாரும் காரணமில்லை;நான் சுயமாக மரணிக்கின்றேன்" என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி பயன்படுத்திய தொலைபேசி மற்றும் சிம் அட்டை போன்றவற்றை  சுமார் மூன்று மாதத்திற்கு முன்னர் உடைத்து வீசியுள்ளார்.இது சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யுவதியின் உடற்கூற்று விசாரணைக்கு பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours