(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவிலில் மகாத்மா காந்தியில் 152வது ஜனனதினத்தை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மகாத்மா காந்தியில் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோவில் மண்டானை கிராமத்தினைச் சேர்ந்த 100 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு தம்பிலுவில் லோகநாதன் அறக்கட்டளை நிலையத்தின் தலைவர் எல்.சந்திரபவன் தலைமையில் மண்டானை பூம்பூகார் அறநெறிப் பாடசாலை வளாகத்தில் நேற்று(02)  இடம்பெற்று இருந்தன.

அஹிம்சாவாதி மகாத்மா காந்தியில் 152வது பிறந்த தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நியூசிலாந்து காந்தி இல்லம் மற்றும் வன்னிக் கோப் பீப்பில்ஸ் சேவிஸ் கவுல்சில் ஆகிய அமைப்புக்களின் நிதி பங்களிப்புடன் தம்பிலுவில் லோகநாதன் அறக்கட்டளையின் ஊடாக 100 வறிய குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் அம்பாரை மாவட்ட இந்துசமய  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் திருக்கோவில் பிரதேச இந்துசமய  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந் சிவநெறி அறப்பணி மன்ற செயலாளரும் லோகநாதன் அறக்கட்டளையின் இணைப்பாளருமான எல்.சரவணபவன் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours