(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு  231 வது இராணுவ  படைப்பிரிவின் மூன்றாவது தடவையாகவும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரண தொகுதியொன்று இன்று 04.10.2021 ஆந் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை காலாட்  இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க   அமெரிக்காவில்  வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை  உறவுகளினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் பெறுமதியான  ஒட்ஸிஜன்  செறிவாக்கி மற்றும்  கொவிட்  19   தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிட்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ  உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண தொகுதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 231ஆவது இராணுவ  படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியான பிறிகேடியர் கேணல்  டிலூப  பண்டார   தலைமையில்   கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில்  கல்லடி   231 வது இராணுவ  படையணியின்  இராணுவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை  நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை காலாட்  இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில்  வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை  உறவுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியாசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்  வழங்கப்பட்டு  வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours