(சா.நடனசபேசன்)

அமரர் ஓய்வு பெற்ற அதிபர் சா.சரவணமுத்து அவர்களின் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட திடலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 30 ஆம் திகதி சனிக்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டுமைதானத்தில் அன்னாரது புதல்வர் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

40 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்குக்கான முதலாவது அடிக்கல்லினை 
ஓய்வு பெற்ற அதிபர் சா.சரவணமுத்து அவர்களின் பாரியார் நட்டு வைத்தார்.

இந்நிகழ்விற்கு முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிபர் கே.கருணாகரன் ,கௌரவ விருந்தினர்களாக களுவாஞ்சிகுடி பிரதேசசெயலாளர் திருமதி .வில்வரெத்தினம் சிவப்பிரியா மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம், கிழக்குமாகாண உதவிப் பிரதமசெயலாளர் ஜீ.பிரணவன், லகுகல பிரதேசசெயலாளர் ந.நவநீதராசா, கல்முனை வடக்குப்பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .தி.கிருபைராசா உட்பட பலர் கலந்துகொண்டதுடன் துறைநீலாவணைக்கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியவிளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வில் வரவேற்பு உரையினை மத்தியவிளையாட்டுக்கழகத்தின் தலைவர் ரி.தயாளன் நிகழ்த்தியதுடன் நன்றியுரையினை செயலாளர் சா.மோகன்ராஜ் நிகழ்த்தினார்.




















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours