(க.விஜயரெத்தினம்)

பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் வாகரை யில்  பாதிக்கப்பட்ட நபர்கள்  நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்டஈடு காசோலை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(16)வாகரை மத்திய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.இழப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத, வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நஸ்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு கோறளைபற்று வடக்கு பிரதேச செயலகதில் பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.இங்கு தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு 15 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னால் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்துகொண்டிருந்ததுடன்,பாதிக்கப்பட்ட நபர்கள் நட்டஈட்டு காசோலைகளையும் வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கோறளைபற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்  ஆகியோர் கலந்து கொண்டதுடன் காசோலைகளையும் வழங்கி வைத்தனர்.பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நஸ்டஈட்டு காசோலை பெற்று கொண்டவர்கள் இங்கு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தமது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours