(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இராணுவத்தின் 72வது வருட பூர்த்தியினை அனுஷ்டிக்கும் வகையில் உன்னிச்சை நெடியமடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் கொரோனாவினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதன்போது அரிசி, பருப்பு, மா, சீனி, கடலை, நெத்தலி கடுவாடு, தேயிலை, சவற்காரம், சோயா உள்ளிட்ட மேலும் பல உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதியினை 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 23வது படைப்பிரிவின் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.என்.கொஸ்வத்த, 231வது படைப்பிரிவின் பிரிக்கேடியர் திலுப பண்டார மற்றும் மாவட்ட சிவில் இராணுவ தளபதி, படைப் பிரிவின் தளபதிகள், உன்னிச்சை கெமுறு 4வது படைப்பிரிவின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இவ் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours