நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கோவிட் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கோவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours