(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இலங்கையில் செத்தல்மிளகாய் உற்பத்தியினை ஊக்குவிக்கும் செயத்திட்டத்திணை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுப்பதற்காக இன்று விவசாய ராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் செல்வி.பரசுராமன் மாலதி மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சின் விவசாய நிபுணர் சம்பத் கஜதீர ஆகியோரின் பங்கு பற்றலுடன் மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த திணைக்களத்தலைவர்கள் மற்றும் பிரதேசசெயலாளர், உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் இக்கலந்துறையாடல் நடைபெற்றது.
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டுக்குமாக வெளிநாடுகளில் இருந்து 50ஆயிரம்மெற்றிக் தொண்; செத்தல்மிளகாயினை எமது நாட்டு மக்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படுகின்றது.
சுவீட்சத்தின் நோக்கு பிரகடனத்திக்கு அமைவாக தோசிய உற்பத்தியினை மேன்படுத்தி விதேசிய உற்பத்தியினை குறைத்துக் கொள்வதன் மூலமும் எம் நாட்டு உற்பத்தியினை தன் நிறைவு அடைய செய்யும் முகமாகவும் மிளகாய் உற்பத்திற்கு பொருத்தமான கால நிலை மட்டக்களப்பில் நிலவும் காரணத்தினால் இங்கு 150 ஏக்கர் நிலத்தில் 3 வருடங்களுக்கான திட்டமாக
முன்னெடுப்பதற்கு திர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிளகாய் செய்கைக்கான பயிற்சிகள் மற்றும் ஏனைய விடயங்களை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினுடாக முன்னெடுக்கப்படவுள்ளது மிளகாய் செய்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது 150 ஏக்கரில் புல்லுமலை பிரதேச விவசாய மிளகாய் செய்கையாளர்களுக்கு 50 ஏக்கரும். களுவான்சிகுடி பிரதேச விவசாய மிளகாய் செய்கையாளர்களுக்கு 50 ஏக்கரும். வுhகரை பிரதேச விவசாய மிளகாய் செய்கையாளர்களுக்கு 20 ஏக்கரும். ஏறாவுர் பற்று தளவாய் பிரதேச விவசாய மிளகாய் செய்கையாளர்களுக்கு 30 ஏக்கரும். ஓவ்வொரு மிளகாய் செய்கையாளர்களுக்கும் அரை ஏக்கர் விதம் வழங்கி இவர்களுக்கான
Post A Comment:
0 comments so far,add yours