(வி.ரி.சகாதேவராஜா)
கல்விஅதிகாரிகள் பாடசாலைகளுக்க விஜயம்செய்து கண்காணிப்பிலீடுபட்டதுடன் வரவு அறிக்கைகளுடன் செவ்வைபார்த்தல் பட்டியலையும் பூர்த்திசெய்மு அறிக்கைசெய்தனர்.
அதேவேளை பொலிசாரும் சகல பாடசாலைகளுக்கும் சென்று காலை முதலே கண்காணிப்பிலீடுபட்டதுடன் வரவு அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டனர்.
மாணவர் வரவு அதிபர் வரவு ஆசிரியர்வரவு கல்விசாரா ஊழியர்களின் வரவு என்பன முக்கியமாகக்கவனிக்கப்பட்டது.
மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகைதந்திருந்தனர். வகுப்பறையில் சிலரும்வெளியேயும் அநாயாசமாக மாணவர்கள் திhந்தனர்.ஆசிரியர்களும் அவ்வாறே தத்தமது கருமங்களில் ஈடுபட்டனர்.
கிழக்கிலுள்ள 13வலயங்களிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.
நேற்று அவர் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களின் அறிக்கைகளைப்பெற்று இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours