(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)


இளைஞர்களின் எதிப்பார்வை நிறைவேற்றி சர்வதேச ரீதியாக பலம் பொருந்திய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம்
- திருக்கோவிலில் அமைச்சர் நாமல் தெரிவிப்பு -

கொவிட் 19 நோய் தாக்கம் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே எமது நாட்டிலும் பொருளாதாரம் கல்வி என அனைத்து துறைகயிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தி வருகின்றன.

இருந்தபோதிலும் எமது அரசாங்கள் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்காக அபிவிருத்திகளை முன்னேடுத்து வருவது போன்று எதிர் வரும் ஆண்டில்  இளைஞர்களின் தொழில் வாய்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி சர்வதேச ரீதியாக பலம் பொருந்திய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு திடலில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரனின் தலைமையில் இன்று பதன்கிழமை காலை (13) இடம்பெற்ற நிகழ்வில் தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்களின் வேண்டு வாத்தியத்துடன் மலர் மாலை அணிவித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டு இருந்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்
 

நாட்டு மக்கள் தொடர்ந்து கொவிட் 19 தாக்கத்திற்கு இடம் கொடுக்காது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பங்கொடுத்து தேசிய சர்வதேசிய ரீதியாக விவசாய உற்பத்திகளை கொண்டு செல்ல வேண்டும்

அரசாங்கம் என்ற வகையில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பக்களை ஏற்படுத்திக் கொப்பதற்கான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட்டு வருவதோடு விளையாட்டுத் துறையை வலுப்படுத்தி தேசிய சர்வதேசிய ரீதியாக இளைஞர்கள் சாதனைகளை படைப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான செயற் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்து இருந்தார்.

திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான 1.5மில்லியம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை திறந்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு இருந்ததுடன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி வீரசிங்க டாக்டர் திலக் ராஜபக்ஷ பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொலிசார் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்  








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours