நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட் அறிமுக நிகழ்வு இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம். ஸமீலுல் இலாஹியின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்ஷார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட்டினை அறிமுகம் செய்துவைத்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அலுவலகர் ஏ.முபாரக் அலி கலந்துகொண்டதுடன் மேலும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. றுமைஸா, அக்கரைப்பற்று பிரதேச சம்மேளனத் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours