காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான "பைசர் "(Pfizer)ரக தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்றும்(21) ,நாளையும்(22) பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
18-19வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இத்தடுப்பூசிகள் காரைதீவு விபுலாநந்த தேசிய கல்லூரி, காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் காலை 8மணிமுதல் மாலை 4மணி வரை ஏற்றப்படவிருக்கிறது.
இன்று(21)வியாழக்கிழமை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை(22)வெள்ளிக்கிழமை 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
இந்த இருதினங்களிலும் ஏற்றத் தவறிய மாணவர்களுக்கு, சனிக்கிழமை(23) காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் ஏற்றப்படவிருக்கிறது.
எனவே ,குறித்த வயதுக்குட்பட்ட சகல மாணவர்களும் இந்த பைசர் ரக தடுப்பூசியைப் குறித்ததினங்களில் பெற்றுக்கொள்ளுமாறு காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours