(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
நாடு முழுவதும் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களது சிபாரிசின் பேரில் அறுநூறு பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
மூன்று கட்டமாக வழங்கப்பட்ட இந்த வேலை வாய்ப்பில் இரண்டாம் கட்ட வேலை வாய்ப்புக்கான 124 நியமனக் கடிதம் நேற்று (27) புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
அரச தொழில் வாய்ப்பு எனும்போது குறைந்தபட்ச கல்வித் தகமை என்பது முக்கியமானது. குறைந்தபட்சம் சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றோருக்கான அரச தொழில் வாய்ப்பு பெறுவது சாத்தியமானது.
ஆனால் இம்முறை அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் 'படிக்க தவறியவர்கள்' தொழில் வாய்ப்பினை பெறுவதை நோக்கமாகக் கொண்டு சாதாரண தரக்கல்விக்கு குறைவாக கல்வி கற்றோருகாக இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் காலை 10.30 இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours