நூருல் ஹுதா உமர்

டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் பிரிட்டிஷ் போய்ஸ் விளையாட்டு கழகத்தினுடனான நட்புரீதியிலான 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் போட்டியும் திங்கட்கிழமை (11) மாலை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரிட்டிஷ் போய்ஸ் விளையாட்டு கழக தலைவர் தனது அணியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்க 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்தது 163 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு 164 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக விக்கட்டுகளை பறி கொடுத்து தடுமாறி கொண்டிருந்தனர். நான்காவது இணைப்பாட்டதிற்காக இணைந்த  சஹீல்- அபாம் ஜோடி சிறப்பான துடுப்பெடுத்தாடினர்.

அதிரடியாக அரைச் சதத்தை கடந்த அபாமின் போராட்டம் வீணாகி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிட்டிஷ் போய்ஸ் விளையாட்டு கழகம் வென்றது. இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக  பிரிட்டிஷ் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் வீரர் றஸ்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் அந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 37 பந்துகளுக்கு 53 ஓட்டங்களை பெற்ற அபாமின் திறமையை பாராட்டி அதிதிகளினால் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போட்டிக்கு அதிதிகளாக கல்முனை கிளுகிளுப்பு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours