(எஸ்.அஷ்ரப்கான்)


போராட்டத்தினை திசைதிருப்ப எத்தனிக்கும் தரப்பினருக்கு உடந்தையாக இருப்பதிலிருந்து விலகி இருக்குமாறு அதிபர்களுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

அதிபர்-ஆசிரியர் கூட்டிணைந்த தொழிற் சங்கங்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

சம்பள முரண்பாடு தொடர்பில் தீர்க்கமான கட்டம் ஒன்றை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். இதனை எப்படியாவது குழப்பி போராட்டத்தைத் திசை திருப்புவதற்கான அஜந்தாக்கள் திரைமறைவிலும் ஏவிவிடப்பட்ட தரகர்கள் ஊடகவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் நாம் மிகவும் நிதனமான முன்னேற்பாடுகளை நோக்கியும் நகர வேண்டியுள்ளது. 

எமது ஒன்றிணைந்த இலக்கினை நாம் அடைந்து கொள்ள வேண்டுமாயின் அதிபர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் வலய மட்டங்களிலுள்ள அதிபர் கூட்டமைப்புக்கள் சம்பள முரண்பாடுகளை தீர்க்காமல் பாடசாலைகளை திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில் சிலர் தங்கள் மேதாவித் தனங்களுக்கான எத்தனங்களை நோக்கி நகர்வதாக அறியக் கிடைக்கிறது. அதிபர் ஆசிரியர் சமூக நிலை ஏற்பட வழிவகுக்க வில்லையாயின் மகிழ்ச்சியான கற்பித்தல் இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பதனை குறித்த அதிபர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

கடந்த பல மாதங்களாக மாணவர்களின் கல்வி பாதிககப்படடுள்ளது. இதனை மீளமைக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.ஆசிரியர்களின் உணர்வினைப் புரிந்து பாடசாலை ஆரம்பமாவதற்கு முன் சம்பள முரண்பாட்டுக்கான எதிர்பார்க்கும் தீர்வினை முன்மொழியுமாறே நாம் கேட்கின்றோம்

கைது செய்வோம், மாற்று நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் பயமுறுத்துவதனூடாக ஒரு ஜனநாயகப் போராட்டத்தை நசுக்க எவருக்கு உரிமை கிடையாது. தொழிற்சங்க செயற்பாட்டுகளுக்கான சட்ட திட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக எவராலும் அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஏற்படுமானால் மாற்று வழிமுறைகளில் போராட்ட வடிவங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். 

கற்பித்தலென்பது ஆசிரியர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது அதனை முழு மனதுடன் நிறைவேற்றுவதனூடாக இலக்குகளை அடைவதற்கான விளைவுகளைப் பெறலாம். பயமுறுத்துவதனூடாகவோ விருப்பமற்ற மன நிலையினூடாக எதனை அடைந்து கொள்ள முடியாது

இருநூறு மாணவர்களுக்கு உட்பட்ட தொகையினை உடைய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிடையில் அதிபர் ஆசிரியர் பிரச்சினைக்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் பாடசாலைகளை ஆரம்பிகாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது. இடைக்காலக் கொடுப்பனவு விடயத்தில் பாடம் புகடடியது போல ஆசிரியர்கள் தங்கள் இருப்பை நிரூபித்துக் காட்டுவர். அதிபர் ஆசிரியர்கள் இதற்கென தம்மைத் தயார்படுத்தியுள்ளனர்

கல்வியமைச்சின் செயலாளருக்கு முறையான அறிவிப்பு விடப்பட்டே போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிககப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours