( வி.ரி.சகாதேவராஜா)
அவசர ஆலய பரிபாலனசபைக்கூட்டம் (24)ஞாயிற்றுக்கிழமை மீனாட்சிஅம்மன் சந்நிதானத்தில் ,பரிபாலனசபைச்செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றபோது இத்தெரிவு ஏகமனமதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த 10வருடங்களாக ஆலயத்தலைவராக இருந்துவந்த கோ.கமலநாதன் கடந்த வியாழனன்று(20) காலமானதையடுத்து,புதிய தலைவரைத் தற்காலிகமாகத் தெரிவுசெய்யும் கூட்டம் இடம்பெற்றது.
முன்னதாக இறைபதமடைந்த தலைவர் கோ.கமலநாதனின் மறைவையிட்டு 2நிமிடநேரம் மௌன ஆத்மாஞ்சலி நடாத்தப்பட்டது.அனைவரும் எழுந்துநின்று அவருக்கான அஞ்சலியைச்செலுத்தினர்.
ஆலய போசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட ஆலயபரிபாலனசபையின் நிருவாகசபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
பலநூற்றாண்டு பழைமைவாய்ந்த பழம்பெரும் மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய ஆலய கும்பாபிசேகத்தையொட்டிய ஆலயபுனருத்தாபனப்பணிகள் பற்றி கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours