நூருல் ஹுதா உமர்


2020ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) பெறுபேறுகளின் தரவரிசைப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அக்கறைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ள அதே வேளை தேசிய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்றுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் அடுத்த இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களை முறையே அம்பாறை (தேசிய மட்டத்தில் -23), திருக்கோவில் (தேசிய மட்டத்தில் -25), மகாஓயா (தேசிய மட்டத்தில் -26), கல்முனை (தேசிய மட்டத்தில் -29) ஆகியன தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த பட்டியலில் சம்மாந்துறை கல்வி வலயம் பத்தாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய ரீதியாக 78 வது இடத்தை பிடித்துள்ளது. இருந்தாலும் இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடைசி இடங்களையே தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours