நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவை மட்டக்களப்பில் மீண்டும்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சுற்றுலா விமான சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம்.ஜௌபர் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு விமான நிலைய சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் கிழக்குமாகாணத்தில் விமான சேவையினை மேம்படுத்தும் நோக்கில் குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் பிரதம அதிதியாக கலந்தது கொண்டு விமான சேவைகளை ஆரம்பித்து வைத்ததுடன் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஹரிபிரதாப், வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எஸ்.தாசன், மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் என்.எ.நிறோசன், 231 ஆவது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி கேணல் டிலுப் பண்டார, மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் செல்வராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய கொவிட் சூழ்நிலையில் முடங்கிய நிலையில் இருக்கும் மக்களை சுற்றுலாத்துயின் ஊடாக மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கு மற்றும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கின் அடிப்படையிலேயே இந்த ‘ஜாய் டிரைவ்’ விமான சுற்றுலா மேற்கொள்ளப்பட்டுள்ளது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours