(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வலயம் மத்தி விவசாயப் பிரிவின், ஆயித்தியமலை கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கரவெட்டி விவசாய போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (01) ஆயித்தியமலை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது கரவெட்டி விவசாய போதனாசிரியர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட ஐம்பது விவசாயிகளுக்கு நிலக்கடலை, பயறு, உழுந்து, கெளப்பி போன்ற விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
கரவெட்டி விவசாய போதனாசிரியர் கே.லிங்கேஸ்வரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வீ. பேரின்பராஜா, வலயம் மத்தி உதவி விவசாயப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இவ் உதவியினை வழங்கிவைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours