போரதீவு பிரதேசத்தில் வசிக்கும் உதேஸ்குமார் அவர்கள் சுவிஸ் உதயம் அமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இவரது வாழ்வாதரத்திற்காக ஒருஇலட்சம் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் அவருங்கு வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உதவிக்கான நிதியினை யாழ்பாணத்தினைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வாழும் சமூகசேவகர் நாகராசா விஜயகுமார் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.
இதற்கான ஒழுங்குகளை சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன், செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் க.துரைநாயகம் இஉதவிச் செயலாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்கள் அனைவரினது முயற்சியினால் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அமைப்பின் அங்கத்தவர்களான ஆசிரியர். சா.நடனசபேசன், ஆசிரியர் இ.ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours