மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் இன்று 07.10.2021 ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கொவிட் சூழ்நிலை காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெறாதிருந்த மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த 245 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியில் காணப்படுகின்ற அரச திணைக்களங்களுக்கான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் இன்று மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் குறுங்கால மற்றும் நீண்ட கால குத்தகைக்கு காணிகளை வழங்குவது தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மயானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்காக காணிகளை பாராதீனப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours