(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் விஜயதசமி பூஜை வழிபாடுகள்

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் 10ம் நாள் விஜயதசமி பூஜை வழிபாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று இருந்தன.

இவ் வாணிவிழா பஜனை பூஜை வழிபாடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கொவிட் 19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக குறைந்தளவான உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்று இருந்தன.

வாணி விழா பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ ஜெகதீசன் சர்மாவின் வேதாகம மந்திர உச்சாடனத்துடன் அர்சணைகள் தீபாராதணைகள் இடம்பெற்று சகலகலாவல்லி மாலை மற்றும் மங்கள பாராயணத்துடன் விநாயகர் மற்றம் முப்பெரும் தேவிகளுக்கும் மலர் தூவி இறை வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இவ் வாணி விழா பூஜையில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உற்பட் அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பஜனை பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours