(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு கடுக்காமுனை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆலயத்தின் அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் முகமாக சுற்றுமதிலிற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இராஜாங்க அமைச்சரின் ஐந்து இலட்சம்  ரூபாய் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் குறித்த ஆலயத்திற்கான அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம், இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சன கௌரி தினேஸ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் உள்ளிட்ட கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours