மாளிகைக்காடு நிருபர்

இஸ்லாமிக் ரிலீப் எனும் அரச சார்பற்ற  நிறுவனத்தினால் "Empowering Widows and Women Headed Householders Through Sustainable Livelihood Program" எனும் கருப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் சுயதொழில்களை வலுவூட்டி வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் திங்கட் கிழமை இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இவ்வாழ்வாதார உதவி வழங்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் நிரோஸ் போஷ்கோ, பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.ஷாந்தி, நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். சுபுஹான், நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் ஜி.சுகீர்தனி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்திட்டம் பற்றிய தெளிவையும் வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு  சிறுவருர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறுல் ஹஷீனா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான், உளவளத் துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், முன்பிள்ளைப்பருவ சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours