எதிர்வரும் பண்டிகை காலங்களான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு 15 ரூபாயும், சம்பா அரிசியின் விலை 30 ரூபாயும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அரிசிக்கான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையின் வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து விலை அதிகரிக்கலாம் என்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours