இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேற்றின் பகுப்பாய்வைப்பார்க்கும்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இறுதிநிலையிலிருப்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கையில் 9மாகாணங்கள் உள்ளன. அவற்றில் கிழக்கு மாகாணம் எட்டாவது(8) இடத்திலும் வடக்கு மாகாணம் ஒன்பதாவது(9) இடத்திலும் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் முதல்நிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள இடைக்கால பெறுபேற்றின்படி தென் மாகாணம் முதலிடத்திலும் ,வடமேல் மாகாணம் இரண்டாவதுஇடத்திலும் ,மேல் மாகாணம் மூன்றாவது இடத்திலும் வந்துள்ளது.
ஊவா ,மத்திய ,சபரகமுவ ,வடமத்திய மாகாணங்கள் முறையே 4ஆம் ,5ஆம், 6ஆம் ,7ஆம் இடங்களிலும் உள்ளன.
99 வலயமட்ட முடிவுகள்
இதேவேளை பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள வலய மட்ட பெறுபேறுகளின்படி வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான வலயங்கள் பின்னிலையிலிருப்பதைக்காணலாம்.
எனினும் இலங்கையிலுள்ள 99 வலயங்களில் அக்கரைப்பற்று வலயம் முதல் பத்து நிலைகளுள் வந்துள்ளது. அதாவது 9ஆவது இடத்தில் இருப்பது பாராட்டுக்குரியது.
அதேவேளை, அம்பாறை 23ஆவது இடத்திலும், திருக்கோவில் 25ஆவது இடத்திலும் ,மகாஓயா 26ஆவது இடத்திலும் ,கல்முனை 29ஆவது இடத்திலும், மட்டக்களப்பு மத்தி 33ஆவது இடத்திலும் ,மட்டக்களப்பு 46ஆவது இடத்திலும் ,தெஹியத்தக்கண்டிய 57ஆவது இடத்திலும் ,மூதூர் 74ஆவது இடத்திலும், சம்மாந்துறை 78ஆவது இடத்திலும் ,பட்டிருப்பு 84ஆவது இடத்திலும், திருகோணமலை 87ஆவது இடத்திலும் ,கந்தளாய் 90ஆவது இடத்திலும், கல்குடா 91ஆவது இடத்திலும், மட்டு.மேற்கு 94ஆவது இடத்திலும், கிண்ணியா 97ஆவது இடத்திலும் ,திருமலை வடக்கு 98ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours