துதி


மாநகர ஆணையாளரை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மாநகரசபையின் நடவடிக்கைகளைக் குழப்புவதும், அதன் மூலமான அபிவிருத்தியினைத் தடைப்படுத்துவதுமே முழு குறிக்கோளாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டத்தை ஒரு அதிகாரி மீறியிருக்கின்றார், குற்றவியல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளார். ஆனால் அவருக்கெதிராக கிழக்கு ஆளுநர், பிரதம செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குழப்ப நிலைமை தொடர்பில் தெளிவூட்டும் முகமாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபையில் நூற்றுஐம்பதிற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் இருக்கின்றார்கள். இவர்களது நியமனங்களை நாங்கள் புதுப்பிக்கும் போது அந்த உத்தியோகத்தரின் நேரடி மேற்பார்வையாளரின் பரிந்துரை, மற்றம் மாநகர முதல்வரின் அனுமதி கிடைத்ததன் பின்னர் தான் அவர்களுக்கு மீள நியமனம் வழங்க முடியும் என்ற தெளிhன சபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால் சபையின் தீர்மானத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் ஆணையாளரால் வேலை நீடிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இது மாநகரசபையின் தீர்மானத்தையும், சட்டத்தையும் மீறிய செயலாகும். மாநகர ஆணையாளர் 170 (3)ன் பிரகாரம் மாநகரசபைத் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட முடியாது. 177ன் கீழ் நியமனத்தை வழங்கலாம் ஆனால் சபைத் தீர்மானத்தைத் தழுவியே வழங்கப்பட வேண்டும். பிழையான முறையில் நியமனங்களை வழங்கினால் அதற்கு சபையோ, முதல்வரோ பொறுப்பாக மாட்டார்கள்.

மாநகர ஆணயாளர் தற்துணிவில் அவருக்கு அந்த நியமனத்தை வழங்கினால் அதற்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும். அவ்வாறு பிழையான நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், சம்பளத்திற்கு எங்கள் அனுமதிக்காக வரும் போது தான் எங்களால் அவ்விடயம் அவதானிக்கப்பட்டது. நியமனம் எங்களால் சிபாரிசு செய்யப்படாத ஒருவருக்கு சட்ட விரோதமாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக நியமனம் வழங்கப்பட்டமை பற்றியும், அதனால் எற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் நாங்கள் தெளிவாக உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

உள்ளுராட்சி ஆணையாளருக்கு இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம் அத்துடன் இவருக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக பிரதம செயலாளர் மற்றும் ஆளுநருக்கும் கடிதம் இட்டுள்ளோம்.இவர்கள் இருவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உள்ளுரர்டசி ஆணையாளர் உரிய தரப்பினரிடம் தெளிவாக விளக்கம் கோரியுள்ளதோடு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடபட்டிருக்கும் ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டிருக்கின்றார்.

உள்ளுராட்சி ஆணையாளரின் கடிதத்திற்கு மாநகர ஆணையாளர் உரிய ஊழியர்களக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக எனக்குப் பிரதியிட்டு உள்ளுராட்சி ஆணையாளருக்குப் பதில் எழுதியுள்ளார். ஆனால் இன்றுடன் ஐந்து நாட்களாகப் போய்விட்டது. இன்னும் அவர் அந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவில்லை.

இதற்கிடையில் வாகனப் பகுதியில் இருந்த வாகனங்களின் திறப்புகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் வேலைப்பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள பொறியியலாளருக்கு உடனடியாக உரியவர்களுக்கு எதிராகப் பொலிஸ் முறைப்பாடு செய்து விசசாரணைக்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதம் அனுப்பினேன். ஆனால் இன்றுவரை அவ்வாறு பொலிஸல் முறைப்பாடு செய்யப்படவில்லை.

எனவே வேண்டுமென்றே மாநகரசபைச் செயற்பாட்டைக் குழப்புவதும், பொதுமக்களுக்குப் பிழையான தகவல்களை வழங்குவதுமாகத் தான் இங்கே எங்களது நிருவாகத்தில் இருக்கின்ற ஆணையாளர் செயற்படுகின்றார். ஆணையாளர் உயரதிகாரிகளுக்குச் சொல்வது ஒன்றும்  களத்தில் செயற்படுவது வேறொன்றுமாகவே இருக்கின்றது.

எனவே முறையற்ற விதத்தில் கொடுக்கப்பட்ட நியமனம் மீளப்பெறப்பட வேண்டும். அந்த ஊழியார் கடமை புரிந்த ஒருமாதகால சம்பளத்தை எவ்வாறு கொடுப்பது என்பது பற்றி எதிர்வரும் சபையில் முடிவெடுக்கலாம்.

குறிப்பிட்ட நபர் தவிர்ந்த அனைவரும் வேலைக்கு அனுப்பப்பட வேண்டும், வேலைகளில் எவ்வித தாமதமும் இருக்கக்கூடாது என்பதை எமது மாநகர ஆணையாளருக்கு உள்ளுராட்சி ஆணையாளரால் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் அனைத்து அறிவுறுத்தல்களும் உதாசீனம் செய்யப்படுகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனவே மாநகரசபையின் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதற்கு ஆணையாளர் தன்னால் விடப்பட்ட பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

நியமனம் நீடிக்கப்படாமல் விடப்பட்ட ஊழியருக்கு எதிராக பல்வேறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் இருக்கின்றன. அதற்கான விசாரணைகள் முடியும்வரை அவருகக்குரிய நியமன நீடிப்பு எங்களால் வழங்க முடியாது.

ஆனால் மாநகரசபைக் கட்டளைச் சட்டத்தை மீறி மாநகர முதல்வரின் அனுமதியின் பின்னர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற சபையின் தீர்மானத்தையும் மீறி ஆணையாரால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு நாங்கள் பொறப்புக் கூற முடியாது.

மாநகரசபையின் தீர்மானத்தின்படி மாநகர ஆணையாளாடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விட்டன. மாநகரசபைத் தீர்மானத்தின் படி மாநகரச சபைக் கட்டளைச் சட்டம் 254யு ன் அடிப்படையில் அவருக்கு மாநகரசபையின் அறிவிட முடியாமல் இருக்கும் வரிகளை அறவீடு செய்வது, விதியோர வியாபாரங்களைத் தடைசெய்வது போன்ற அதிகாரங்களே உள்ளன.

இதை மீறி செயற்படுகின்ற அனைத்தும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டத்தை மீறுவதாகவே அமையும். இவ்வாறாக அவரால் அத்துமிறிச் செய்யப்ட்ட 27க்கும் மேற்பட்ட சட்டமீறல்கள் எங்களால் ஆவணப்படுத்தப்பட்டு ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும், உள்ளுராட்சி ஆணையாளருக்கு, உரிய அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக ஆணையர் என அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையின் சட்டம் மீறப்பட்டதற்கு எதிராக இன்னும் இவர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் அன்று பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

முழு இலங்கைக்கும் ஒரே சட்டம் தான் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் நிருவாகத்திற்குப் பொறுப்பானவர்கள். இலங்கையின் சட்டத்தை ஒரு அதிகாரி மீறும் போது உடனடியாக அதற்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பெப்ரவரி மாதத்திலேயே இவர் இங்கிருந்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மட்டக்களப்பு மாநகரத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

எங்களால் அமுல்ப்படுத்தப்பட வேண்டிய பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றன. எமது உத்தியோகத்தர்கள் பிழையாக வழிப்படுத்தப்படுகின்றார்கள். 2021ம் ஆண்டுக்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் நாங்கள் ஆளுநருக்கோ பிரதம செயலாளருக்கோ அறிவுறுத்தினாலும், அது தொடர்பில் நடவடிக்கையே இல்லை.

இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் மூலம் மாநகர ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு எதிராகத் தiயுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தடையையும் மீறி 87 குற்றங்கள் செய்யப்ட்டதன் பேரில் நாங்கள் நீதிமன்ற அவதூறு வழக்கும் தாக்கல் செய்தோம். நீதிமன்ற அவதூறு வழக்கில் பத்து லெட்சம் ரூபா சரீரப்பிணையில் வந்திருக்கின்றார். ஒரு குற்றவியல் வழக்கின கீழ் பிணையில் இவர் விடுவிக்கபப்ட்டமையால் நிருவாகக் கோவையின் படி அவரின் பணி இடைநிறுத்தப்பட்டு ஒழுக்காற்று நவடிக்கைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதுவும் இன்னமும் செய்யப்படவில்லை. எனவே இந்த விடயம் பிழையான வழியில் நிருவாகத்தைக் கொண்டு செல்வதை ஊக்குவிப்பதாகவே என்னால் உணர முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மாநகரசபையின் நடவடிக்கைகளைக் குழப்புவதும், அதன் மூலமான அபிவிருத்தியினைத் தடைப்படுத்துவதுமே இதன் முழு குறிக்கோளாக இருக்கின்றது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours