( எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை விவசாய விரிவாகல் நிலைய பிரிவின் 
மாவடிப்பள்ளி -பண்டீத்தீவு கிழல் வயல் பகுதியில் பாசிப்பயறு அறுவடை மேற்கொள்ளப் பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் முகமாக  அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் ,கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட பண்டீத்தீவு கிழல் வயல் பகுதியில்  விவசாயிகளினால் பயிரிடப்பட்ட  பாசிப்பயறு அறுவடை செய்யும்  நிகழ்வு  (12/10/2021)இடம்பெற்றது.

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய நிலையத்தின் பிரதம போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா , விவசாய போதனாசிரியர் என் .யோகலக்ஷ்மி  மற்றும் தொழல்நுட்ப உதவியாளர் கே. குகலேந்தினி ஆகியோரின்ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் குறித்த பாசிப்பயறு செய்கை பண்ணப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்பட்ட மை குறிப்பிடத்தக்கது

அத்துடன் குறித்த பாசிப்பயறு செய்கை மேற்கொள்ள வழிகாட்டலை மேற்கொண்ட விவசாய விரிவாக்கல் பிரிவினருக்கு  விவசாயிகள் நன்றியினை தெரிவித்தனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெற் பயிர் செய்கை  விதைப்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  இதற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் குறித்த பாசிப்பயறு செய்கை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

இதேவளை கடந்த நாட்களில் கல்முனை விவசாய விரிவாக்கல் பிரிவில் விவசாயிகளினால் உப உணவு பயிர் செய்கையான உளுந்து ,  கச்சான் , கெளபி என்பன பயிர்  செய்கை மேற்கொள்ளப் பட்டு நல்ல விளைச்சல் பெறப்பட்டு அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours