( வி.ரி.சகாதேவராஜா)

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சினால் 33வது தேசிய விளையாட்டுவிழாவையொட்டி ,அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் திருக்கோவில் பிரதேசசெயலக அணி முதலாமிடம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.

இப்போட்டியானது ,அம்பாறை பொது விளையாட்டுமைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் உகன ,திருக்கோவில் ,கல்முனைவடக்கு ஆகிய மூன்று பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.

அணிக்க 6பேர் கொண்ட 5ஓவர் கிரிக்கட் சுற்றுப்போட்டியில், இறுதிப்போட்டிக்கு உகன பிரதேச செயலக அணியும், திருக்கோவில் பிரதேசசெயலக அணியும் தெரிவாகி மோதின. 

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உகன அணி 5ஓவர் நிறைவில் விக்கட் இழப்பின்றி 46ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெத்தாடிய திருக்கோவில் அணி 3.5ஓவர்களில்விக்கட் இழப்பின்றி  47ஓட்டங்களை எடுத்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

திருக்கோவில் அணித்தலைவி முத்துராமன் பிருந்தா (தாண்டியடி) தனதுஅணிக்காக 39ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக  தெரிவுசெய்யப்பட்டார்.

இப்போட்டியில் திருக்கோவில் பெண்கள் அணி முதலாமிடம் பெற்று தேசியப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.14வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக திருக்கோவில் அணி தேசியப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

திருக்கோவில் இளைஞர்சேவை அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் பெண்கள் கிரிக்கட் அணியினரோடு அம்பாறை சென்ற குழுவில் .இளைஞர்கழக ஒருங்கிணைப்பாளர் ரி.நிஷாந்தன் பயிற்றுவிப்பாளர்களான என்.லவகேஸ்வரன் என்.யதுசன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

மாவட்ட சாம்பியனாகி தேசிய மட்டபோட்டிக்குத்தெரிவான பெண்கள் கிரிக்கட் அணியினருக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் இளைஞர்சேவை அதிகாரி கே.பிரபாகரன் கூறுகையில் திருக்கோவில் வரலாற்றில் இது இரண்டாவது தடவையாக தேசியப்போட்டிக்குத் தெரிவான சந்தர்ப்பம். இதற்கு முதல் 2007இல் திருக்கோவில் அணி தேசியப்போட்டிக்குதெரிவாகி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். வெற்றிக்கான உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறினார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours