நூருல் ஹுதா உமர்
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சியான "வாசிப்பும் வாழ்வும்" எனும் மாணவர்களுக்கான செயலமர்வு நிகழ்வு செவ்வாய்க் கிழமை சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீகாவின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஸான், மாவட்ட கலாசார அதிகார சபை உப தலைவரும் ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளருமான ஏ. பீர்முகமது (வளவாளர்), கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஐ. எம்.அஷ்ரப், சித்தி ஜெஸீரா, பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஸைபுத்தீன், பாடசாலை பிரதி அதிபர் டீ.கே.முஹம்மட் ஷிராஜ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours