(சுமன்,க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுலி நிமலன் செளந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர்  முன்னணி ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் முறக்கொட்டான்சேனை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் (2021-11-07)காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சணாக்கியன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், கி.துரைராசசிங்கம் வாலிபமுன்னணி உறுப்பினர்கள் பொது அமைப்பு ஒன்றியங்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்டவர்கள் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி வழிபாட்டில் ஈடுபட்டதோடு இரத்ததானத்தில் ஈடுபட்டார்கள்.இதன்போது சுமார் 100 மேற்பட்டவர்கள் இரத்தக்கொடையை ஈகை செய்து தமிழ்தேசிய உணர்வையை பறைசாற்றினார்கள்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours