(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

"சுபீட்ச பாதைப் புரட்டு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக  பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் நாடுபூராகவும்  இடம்பெற்றது.
 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்
"நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை பிரகனடத்திற்கு அமைவாக” 100,000 கிலோமீற்றர் வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் வேலைகளை பூர்த்தி செய்த 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து மக்கள் உரிமையாக்குதல் செயற்பாடானது இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு ஜீ.எஸ் வீதியானது பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது சிபாரிசில் புனரமைக்கப்பட்ட 1.014 கிலோமீட்டர் நீளமான கொங்கிறிட் வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

26.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த வீதியானது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரிகள், முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours