(சுமன்)



கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியரும் சமூக சேவையாளருமான கீர்த்திஸ்ரீ தேசபந்து வைத்தியபீமானி பெரியதம்பி வினாசித்தம்பி ஜெயராஜா அவர்கள் தனது 80வயதில் நேற்றைய காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அமிர்தகழியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓய்வுபெற்ற அதிபராகவும், ஆயுர்வேத வைத்தியத் துறையில் தனக்கென தனியிடத்தினையும் கொண்டவராக இருந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான வைத்திய முறைகள் ஊடாக புகழ்பெற்ற இவர் சமூக சேவையிலும் அதிகம் நாட்டம் கொண்டவராக காணப்பட்டதன் காரணமாக மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக பல்வேறு கௌரவிப்புகளையும் பெற்றுக்கொண்டவர்.

தேனக கலைச்சுடர் என்ற சிறப்பு விருதினையும் பெற்றுள்ள இவரின் சேவையானது கிழக்கு மாகாண மக்களின் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்ககூடியது.

அன்னாரின் உடலம் அமிர்தகழி, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (05) மாலை 04மணிக்கு அமிர்தகழி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அன்னாரின் குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours