(காரைதீவு சகா)
நீண்டகால கொரோனா விடுமுறையின் பின்னர் நேற்று(8)திங்கட்கிழமை க.பொ.த சாதாரண தரத்தின் முதல்வருடம் என அழைக்கப்படும் தரம் 10, சாதாரணதரத்தின் இரண்டாம் வருடம் என அழைக்கப்டும் தரம் 11 மற்றும் உயர்தர 1ஆம் 2ஆம் வருட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்தனர்.
கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க அரசாங்கம் பல வகையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி படிப்படியாக நான்குகட்டங்களாக பாடசாலைகளை திறந்துவருகிறது.
அதன்படி மூன்றாம்கட்டமாக நேற்று 8ஆம் திகதி தரம் 10, 11, 12, 13ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டிருந்தது.
நான்காம் கட்டமாக ,தரம் 6முதல் தரம் 9வரையான மாணவர்களை எப்போது அழைப்பது என்பதை இன்னும் கல்வியமைச்சு வெளியிடவில்லை. எனினும் அதுவும் அடுத்தவாரம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours