நூருல் ஹுதா உமர்

வீதி அபிவிருத்தி அதிகாரபையின் அக்கரைபற்று பிரதான பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதம பொறியியலாளராக எந்திரி தாமோதரம் சிவசுப்ரமணியம் பதவி உயர்வு பெற்று மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி. அலியார் அவர்களின் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கடந்த 1997.01.13 திகதி வீதி அபிவிருத்தி அதிகாரபையில் இணைந்து இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை மற்றும் கொழும்பு காரியாலயங்களில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார். மேலும் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நிறைவேற்று பொறியியலாளராக கடந்த 2019 ஜூனிருந்து இம்மாதம் 16ம் திகதிவரை கடமையாற்றியுள்ளார்.

வீரமுனையில் சாதாரண தரம் வரை கல்விபயின்ற இவர் தனது உயர்தரத்தை சம்மாந்துறை மத்திய கல்லுரியில் கற்று பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு தனது பொறியியலாளர் பட்டத்தை  பெற்றுக் கொண்ட இவர் சம்மாந்துறை, வீரமுனையை பிறப்பிடமாகவும் காலம் சென்ற அதிபர் தாமோதரம் மற்றும் செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும் காரைதீவைச் சேர்ந்த முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி  ஜீவாராணியின் கணவரும் ஆவார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours